எங்களை பற்றி
பெரும் முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெருந்தொழில்
மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு டிட்கோ வழிவகை
செய்து வருகிறது. சென்னை-பெங்களூரு தொழில் பெருந்தடம், சென்னை-கன்னியாகுமரி
தொழில் பெருந்தடம், கொச்சி-கோயம்புத்தூர்-பெங்களூரு தொழில் பெருந்தடம் மற்றும்
பாதுகாப்புத் தொழில் பெருந்தடம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில்
செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாக டிட்கோ செயல்படுகிறது.
இரசாயனப் பொருட்கள், உரங்கள், மருந்து பொருட்கள், ஜவுளி, இரும்பு மற்றும்
எஃகு, வாகன உதிரி பாகங்கள், உணவு மற்றும் வேளாண்மை, கொய் மலர் வளர்ப்பு,
பொறியியல், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு
போன்ற உற்பத்தித் துறை சார்ந்த மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், உயிரி
தொழில் நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுத்
திட்டங்கள் மற்றும் வேளாண் ஏற்றுமதி மண்டலங்கள் போன்ற உட்கட்டமைப்பு துறை
சார்ந்த பல கூட்டாண்மை நிறுவனங்களில் டிட்கோ முதலீடு செய்துள்ளது.
- டிட்கோ தமிழ்நாட்டில் பெரிய தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உதவுகிறது.
- டிட்கோ இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டிட்கோ நான்கு வகையான கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கிறது: கூட்டுத் துறை (வர்த்தகப்பங்கில் பங்கேற்பு - 11% மற்றும் 26% வரை)
- இணை பிரிவு (2% முதல் 11% வர்த்தகப்பங்கில் பங்கேற்பு). பாதுகாவல் துறை (1% பங்கு)