எழுத்துரு அளவு : | திரை வாசிப்பு            

Tamil Nadu Polymer Industries Park

TIDCO
TIDCO

தமிழ்நாடு பாலிமர் தொழிற் பூங்கா

தமிழ்நாடு பாலிமர் தொழிற் பூங்கா (வரையறுக்கப்பட்டது) (டிபிஐபிஎல்-TPIPL) என்பது டிட்கோ மற்றும் சிப்காட் (SIPCOT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். டிபிஐபிஎல் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் வோயலூர் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில் 265.66 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் பாலிமர் தொழிற் பூங்காவை நிறுவுகின்றது.
இந்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டமானது நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பாலிமர் உதிரிபாக உற்பத்தி அலகுகளுக்கு இடமளிக்கும். திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.02.2020 அன்று அடிக்கல் நாட்டினார். வளர்ச்சிப் பணிகள் 2020 டிசம்பர் மாதத்தில் நிறைவடையும்.